இரட்டை வேடம் வேண்டாம்; தமிழக அரசை சாடிய முபாரக்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரட்டை வேடம் வேண்டாம் என்று தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், மதுரை திருப்பரங்குன்றம் விஷயத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடாமல் அரசியல் செய்யாமல், இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும். இவ்விவகாரத்தில் ஜனநாயக சக்திகளோடு எஸ்டிபிஐ கட்சி என்றைக்கும் நிற்கும். சிறுபான்மை சமூக மக்களின் வழிபாட்டு உரிமையையும் மீட்டெடுக்கிற வகையில் குரல் கொடுக்க துணை நிற்கும் என கூறியுள்ளார்.
Tags :