நள்ளிரவிலும் மழை வெள்ளம் பாதிப்பு குறித்து அதிரடி ஆய்வில் இறங்கிய முதல்வர்

by Editor / 31-12-2021 12:11:34am
நள்ளிரவிலும் மழை வெள்ளம் பாதிப்பு குறித்து அதிரடி ஆய்வில் இறங்கிய முதல்வர்

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது பல இடங்களில் தண்ணீர் செல்ல முடியாமல் மழை நீர் தேங்கி உள்ளது இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து நேரில் அதிகாரிகளிடம் கேட்டறிந்து   வருகிறார். மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநராட்சி ஆணையாளர் சுகன்தீப்சிங்பேடி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள்  கலந்து கொண்டுள்ளனர், மூன்று பாதாள சுரங்கங்களில்  அதிக அளவில் மழை நீர் தேங்கி இருந்த காரணத்தால் அங்கு கூடிய மழை நீரை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும் போக்குவரத்து அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. எனவே சுரங்கப்பாதைகள் விரைவில் அங்கு  இருக்கக் கூடிய மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

முதல்வர்  மழை நீரை அதிகமாக இருக்கும் பகுதிகளில் தற்போதைய நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதை நேரடியாக சென்று ஆய்வு மேற் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் சென்னை மற்றும் சுற்றி  இருக்கக்கூடிய பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மழை ஏற்படுத்த கூடிய பாதிப்புக்கள் குறித்த சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கிறது, என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து நடவடிக்கைகளை எடுக்க  அதிகாரிகள்  ஆய்வுகளை தொடங்கி நடத்தி வருகிறார் முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு,  மாநகராட்சி ஆணையர் சுகன்தீப்சிங்பேடி உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் மழையின் காரணமாக  பாதிப்புகளை  ஏற்படுத்தி இருக்கும் பகுதிகளை  முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 

Tags :

Share via