குளிர்கால புயல்- அமெரிக்காவின் பாதிக்கு மேற்பட்ட மாநிலங்களில் அவசர நிலை
அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் ஏற்பட்டுள்ள குளிர்கால புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கடும் பனி மற்றும் பலத்த காற்றினால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் மற்றும் அலுவலகங்கள்,மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். கனடாவின் டொரன்டோ நகரில் வரலாற்றில் இல்லாத அளவிற்கான மிக அதிகப்படியான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது இதனால் சாலை போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் கடமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அமெரிக்காவின் பாதிக்கு மேற்பட்ட மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது தேசிய வானிலை ஆய்வு மையம் மக்கள் வீடுகளுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பனி புயலின் காரணமாக பல இடங்களில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Tags :


















