உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ராணுவம் எங்களிடம் உள்ளது -அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதலாவது ஒருங்கிணைந்த மாகாண உரையை ஒரு மணி நேரம் 47 நிமிடங்கள் வழங்கினார். இது அமெரிக்க வரலாற்றில் ஆற்றிய மிக நீண்ட யூனியன் முறையாகும் இதற்கு முன் 2000 ஆண்டில் பில் கிளின்டன் ஆற்றிய என்பத்து ஒன்பது நிமிட உரையின் சாதனையை இது முறியடித்தது. அவர் பேசும்பொழுது, ஈரானை உலகின் முதன்மையான பயங்கரவாத ஆதரவு நாடு என்று குறிப்பிட்டதோடு அந்நாடு அணு ஆயுதங்களை உருவாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். பிரச்சனைகளை தீர்க்கத்தான் தாம் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகளையே விரும்புவதாக தெரிவித்த அவர் அதே நேரத்தில் ஈரானிடம் இருந்து நாங்கள் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க மாட்டோம் என்ற உறுதியான வார்த்தைகளை எதிர்பார்ப்பதாகவும் ஈரான் தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்க தளங்களை அச்சுறுத்தும் ஏவுகணைகளை வைத்துள்ளதாகவும் விரைவில் அமெரிக்காவை அடையும் வகையிலான ஏவுகணைகளை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியதோடு அமெரிக்காவின் உறுதிப்பாட்டை யாரும் சந்தேகிக்க வேண்டாம் என்றும் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ராணுவம் எங்களிடம் உள்ளது என்றும் அவர் தனது உரையில் தெளிவு படுத்தினார். அவரின் இந்த உரையானது அமெரிக்க உள்நாட்டு கொள்கைகளை விட மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில் ஈரானுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
Tags :


















