இந்திய பொதுவுடமை கட்சியின் மூத்த தலைவர்இரா. நல்ல கண்ணு காலமானாா்.
இந்திய பொதுவுடமை கட்சியின் மூத்த தலைவர்இரா. நல்ல கண்ணு உடல் நலக்குறைவின் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலம் முன்னேற்றம் அடையாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அவர் இன்று காலமானதாக அதிகாரப்பூர்வமாக செய்தி வெளிவந்துள்ளது.அவருக்கு வயது101.டிசம்பர் 26 1925 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக 25 ஆண்டுகளும் 13 ஆண்டுகள் இந்திய பொதுவுடமை கட்சியின் மாநில செயலாளராகவும் இந்திய சுதந்திரப் போராட்டம் விவசாயிகள் போராட்டம் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் என தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை மக்களினுடைய பிரச்சனைக்காக முன்னெடுத்துச் சென்ற ஒரு தலைவர். இவருக்கு கட்சி வசூலித்துக் கொடுத்த ஒரு கோடி ரூபாயை கட்சிக்கே திருப்பிக் கொடுத்ததோடு தமிழக அரசு வழங்கிய அம்பேத்கர் விருதோடு ஒரு லட்ச ரூபாயும் வழங்கியது அதையும் கட்சிக்காக அவர் திருப்பிக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் எளிமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்த தலைவர்.
Tags :



















