தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

by Staff / 01-11-2023 12:08:07pm
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். நீதிமன்ற உத்தரவுபடி தீபாவளி பண்டிகைக்கு பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo