கிரேன் உடைந்து விழுந்து கிரேன் ஆபரேட்டர் பரிதாப பலி

by Staff / 12-09-2023 12:52:21pm
கிரேன் உடைந்து விழுந்து கிரேன் ஆபரேட்டர் பரிதாப பலி

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் கியானா கப்பலில் எகிப்து நாட்டுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்யும் பணி நடைபெற்று வந்தது. தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியை சேர்ந்த பாரத் (40), என்பவர் கிரேன் மூலமாக லாரிகளில் இருந்து நிலக்கரியை கப்பலில் ஏற்றி கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென, கிரேன் உடைந்து கப்பலின் உள்ளே விழுந்துள்ளது. இதில் கிரேனுக்கு அடியில் சிக்கிய பாரத் பலத்த காயமடைந்தார். உடனடியாக சக ஊழியர்கள் பாரத்தை மீட்டு வ.உ.சி துறைமுக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Tags :

Share via

More stories