புது வகை கொரோனா: தடுப்பூசியை வேகப்படுத்தும் இங்கிலாந்து

by Staff / 12-09-2023 12:53:55pm
புது வகை கொரோனா: தடுப்பூசியை வேகப்படுத்தும் இங்கிலாந்து

இங்கிலாந்தில், கொரோனா தொற்றின் அடுத்த மாறுபாடு (பிஏ.2.86) பரவுவதாக அந்நாட்டு சுகாதார துறை கண்டறிந்தது. இதனை அடுத்து சுகாதார துறை, குளிர்காலத்தில் எளிதாக வைரஸ் தொற்றால் பாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தற்போது தொடங்கி உள்ளது. பெரியவர்களுக்கான கொரோனா தடுப்பூசியும், வருடாந்திர ப்ளூ தொற்றிற்கான தடுப்பூசியும் ஒரே சமயத்தில் செலுத்த தொடங்கிவிட்டதாக தேசிய சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா தோற்று அதிகளவில் பரவாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories