செப்டம்பர் 16-ல் டிடிவி தினகரன் மகள் திருமணம்

by Editor / 26-08-2021 01:06:05pm
செப்டம்பர் 16-ல் டிடிவி தினகரன் மகள் திருமணம்

அமமுக பொதுச் செயலாளர் டிஅமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.டிவி தினகரனின் மகள் திருமணம் அடுத்த மாதம் 16ம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோவிலில் நடைபெறவுள்ளது.இருவருக்கு கடந்த ஜூன் 13ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. எனினும்,கொரோனா ஊரடங்கு காரணமாக அதிகம் பேர் பங்கேற்க முடியாது என்பதால் திருமண நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.முக்கிய கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனது மகளின் திருமண ஏற்பாடுகளை டிடிவி தினகரன் தீவிரப்படுத்தியுள்ளார். ஜெயஹரிணி- ராமநாதன் துளசிக்கு வரும் செப்டம்பம் 16ம் தேதி காலை 8.30 முதல் 10 மணிக்குள் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோவிலில் அமைந்துள்ள கல்யாண  சுந்தரேசுவரர் சன்னதி புதிய மேடையில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் டிடிவி தினகரனின் சித்தியுமான சசிகலா தலைமையில் இந்த திருமணம் நடைபெறவுள்ளது. 

 

Tags :

Share via