குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி நிபுணர்கள் அடங்கிய 2 குழுக்களின் அறிவுரைப்படி முடிவ

by Editor / 06-12-2021 03:20:38pm
குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி நிபுணர்கள் அடங்கிய 2 குழுக்களின் அறிவுரைப்படி முடிவ

கொரோனா தடுப்புக்கான கூடுதல் டோஸ் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுவது குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. 

 இதுவரை சுமார் மூன்றரை கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அதேபோல், தோராயாமகா நான்கரை லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.  நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதிய வகை ஒமிக்ரான் பாதிப்புகள் குறித்து மக்களவையில் பேசும்போது, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ்கள் போடுவது ஆகியவை அரசு அமைக்கும் நிபுணர்கள் அடங்கிய 2 குழுக்களின் அறிவுரையின்படியே முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.இந்த நிலையில், நோய் எதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுறுத்தல் குழுவின் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. 
 

 

Tags :

Share via