புதிய உறுதிப்படுத்துட்பட்ட ஓய்வூதிய திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ஒரு ஏமாற்ற வேலை என்று விமர்சித்துள்ளார்.

by Admin / 04-01-2026 12:29:22am
புதிய உறுதிப்படுத்துட்பட்ட ஓய்வூதிய திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ஒரு ஏமாற்ற வேலை என்று விமர்சித்துள்ளார்.

தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய உறுதிப்படுத்துட்பட்ட ஓய்வூதிய திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இது தமிழ்நாடு அரசின் ஒரு ஏமாற்ற வேலை என்று விமர்சித்துள்ளார்.. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதை தவிர்ப்பதற்கான ஒரு தந்திரம் என்று அன்புமணி கூறியுள்ளார் 2021 தேர்தலின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது 55 மாதங்கள் கழித்து தெளிவற்ற ஒரு திட்டத்தை அறிவிப்பது அரசு ஊழியர்களுக்கு செய்யும் துரோகம் என சாடி உள்ளதோடு ஓய்வூதிய திட்டம் குறித்து பரிந்துரைக்க ககன் தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் செயல்பாடுகள் வெறும் நாடகம் என்றும் திட்டமிட்டே காலதாமதம் செய்யப்பட்டதாகும். அவர் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய நிலையில் தமிழ்நாட்டிலும் அதையே உடனடியாக நடைபெறுத்த வேண்டும் என்பதே அன்புமணி ராமதாஸின் குற்றச்சாட்டின் வெளிப்பாடு..

 

Tags :

Share via