ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு- இன்று தீர்ப்பு

by Editor / 17-08-2022 09:08:00am
ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு- இன்று தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடைபெற்றதாக ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்தார். இதனை முதலில் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் பட்டியலிடப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கை கடந்த 10, 11ம் தேதிகளில் நீதிபதி விசாரித்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று பிறப்பிக்கிறார்.

 

Tags :

Share via
Logo