ஜம்மு-காஷ்மீரில் 27 பயங்கரவாதிகள் என்கவுண்டர்

by Staff / 07-07-2023 02:48:14pm
ஜம்மு-காஷ்மீரில் 27 பயங்கரவாதிகள் என்கவுண்டர் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜம்மு-காஷ்மீரில் 27 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தின் படி, 2022ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கையில் 78 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 5 வரை நடத்தப்பட்ட வெவ்வேறு நடவடிக்கைகளில் மொத்தம் 27 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 2022ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 125 ஆக இருந்தது.
 

Tags :

Share via