1 ரூபாய் இட்லி பாட்டிக்கு மகேந்திரா நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட வீடு - அன்னையர் தினமான இன்று வழங்கப்பட்டது.
கோவை வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் இட்லி பாட்டி கமலாத்தாள், இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மலிவு விலையில் இட்லி விற்பனை செய்து வருகிறார். மேலும் மலிவு விலைக்கு இட்லி விற்பனை செய்வதால் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இது குறித்து செய்திகள் வெளியானது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தன்னார்வளர்கள் உதவிகள் கிடைத்து வந்த நிலையில், இட்லி பாட்டி இருந்த வீடு மிகவும் மோசமாக இருந்ததால், தனது இடத்தில் வீடு கட்டி கொடுக்கும்படி கோரிக்கை வைத்திருந்தார், அவரது கோரிக்கையை ஏற்று மகேந்திரா நிறுவனம் வீடு கட்டும் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.பணிகள் நிறைவடைந்த நிலையில் அன்னையர் தினமான இன்று இட்லி பாட்டிக்கு அந்த வீடு வழங்கப்பட்டது. இதனை மகேந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் மகேந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags :