வீட்டு உபயோக எல்.பி.ஜி சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை- இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு
இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் பிறஎண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் தற்போதைய எரிவாயு விவேகம் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் வீட்டு உபயோக எல்.பி.ஜி சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் விநியோகம் சீராகவும் தடை இன்றியும் நடைபெறும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயத்தின் காரணமாக சிலிண்டர்களை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே அல்லது அதிகமாக பதிவு செய்வதால் உண்மையாகவே சிலிண்டர் தேவைப்படுபவர்களுக்கு விநியோகம் செய்வதில் தேவையற்ற தாமதம் ஏற்படக்கூடும் என்றும் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. விநியோகத்தை சீர் செய்யவும் பதுக்கலை தவிர்க்கவும் சிலிண்டர் பதிவுகளுக்கு இடையேயான கால இடைவெளியை மத்திய அரசு 25 நாளில் இருந்து 45 நாட்களாக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் விநியோகஸ்தர்கள் அலுவலகங்களுக்கு நேரில் வருவதை தவிர்க்குமாறும் அதற்கு பதிலாக எஸ் .எம். எஸ் அல்லது மொபைல் செயலிகள் மூலம் சிலிண்டர்களை பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
Tags :



















