பிரதமர் நரேந்திர மோடி நவீன வசதிகளுடன் மறு சீரமைக்கப்பட்ட 75 அதிநவீன ரயில் நிலையங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

by Admin / 17-07-2026 11:25:10pm
பிரதமர் நரேந்திர மோடி நவீன வசதிகளுடன் மறு சீரமைக்கப்பட்ட 75 அதிநவீன ரயில் நிலையங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய அரசின் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் மறு சீரமைக்கப்பட்ட 75 அதிநவீன ரயில் நிலையங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த ரயில் நிலையங்கள் 1,570 கோடி மதிப்பீட்டில் 20 மாநிலங்கள் உள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. .சென்னை பூங்கா ரயில் நிலையம் 14.79 கோடி செலவிலும் சின்னச் சேலம் மற்றும் குன்னூர் ரயில் நிலையங்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்டது. இந்த ரயில் நிலையங்களில் அதி நவீன காத்திருப்பு அறைகள், எஸ்கலேட்டர்கள், மின் தூக்கிகள், டிஜிட்டல் தகவல் பலகைகள், சி,சி,டி,வி கண்காணிப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு அனைத்து ரயில் நிலையங்களும் ஒரே மாதிரியாக இல்லாமல் அந்தந்த பகுதியின் வரலாறு ,கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்கள் 50 ஆண்டுகால தேவைகளை நிறைவு செய்யும் தொலைநோக்குப் பார்வையுடன் நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் 1300க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை நவீன மயமாக்கும் இலக்கோடு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி நவீன வசதிகளுடன் மறு சீரமைக்கப்பட்ட 75 அதிநவீன ரயில் நிலையங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
 
Tags :

Share via

More stories

Logo