போலி ஆவணங்கள் மூலம் 2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்தது முற்றிலும் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
பழனி முருகன் கோவில் மடத்திற்கு சொந்தமான 100 கோடி நில மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .சார்பதிவாளர் மற்றும் மோசடி செய்த நபர்களை உடனடியாக கைது செய்யாதது ஏன் என்று கருத்து தெரிவித்துள்ளது. பழனி மலை அடிவாரத்தில் உள்ள தண்டாயுதபாணி சுவாமிகள் மனத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 1.4 இயக்க நிலத்தை தனி நபர்கள் பெயருக்கு போலி ஆவணங்கள் மூலம் 2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்தது முற்றிலும் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்து ரத்து செய்தது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட சார்பதிவாளரை பணியிடை நீக்கும் செய்தது போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மோசடியில் பங்கெடுத்த சார்பதிவாளர் நிலத்தை வாங்கிய விற்ற நபர்களை காவல்துறை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளதோடு அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் உள்ளது. வழக்கு இப்பொழுது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.
Tags :



















