இந்திய நாட்டின் முதல் தனியார் ராக்கெட் விக்டர் 1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய நாட்டின் முதல் தனியார் ராக்கெட் விக்டர் 1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சனிக்கிழமை மதியம் பன்னிரண்டு ஐந்துக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதலத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. தெலுங்கானா மாநில ஹைதராபாத்தை தனமாகக் கொண்ட ஸ்கை ரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் உள்நாட்டிலே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ராக்கெட்டான இது ஏழு அடுக்கு மாடி உயரமும் நாலு நிலைகளும் கொண்ட கார்பன் கலவையால் ஆன அதிக நவீன ராக்கெட் ஆகும் இது. புவியின் தாழ்வட்ட பாதையில் 450 கிலோமீட்டர் தூரம் உள்ள வட்டப்பாதையில் 350 கிலோ எடை வரையிலான சேர்க்க கோள்களை சுமந்து சென்று நிலை நிறுத்தியது. இந்த ராக்கெட்டில் 3d பிரிண்ட் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன இது ராக்கெட்டின் எடையை குறைத்து அதன் திறனை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உடையது. இந்த ராக்கெட் ஏவுதல் மூலம் விண்வெளி சுற்றுப்பாதைக்கு ராக்கெட்டை அனுப்பும் திறன் கொண்ட தனியார் நிறுவனத்தைக் கொண்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் மூன்றாவது நாடாக சாதனை கொண்டுள்ளது.
Tags :


















