திருவண்ணாமலைகோவிலில் கூலி படம் வெற்றியடைய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.பிரார்த்தனை.

by Staff / 07-08-2025 08:47:21am
திருவண்ணாமலைகோவிலில் கூலி படம் வெற்றியடைய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.பிரார்த்தனை.

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலுக்கு கடந்த சில மாதங்களாகவே திரை பிரபலங்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் இன்று மாநகரம், கைதி, மாஸ்டர், லியோ, உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கூலி படத்தை இயக்கி முடித்துள்ளார், கூலி படம் வெற்றி மாபெரும் வெற்றி பெற வேண்டி இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக சம்பந்த விநாயகரை வழிபட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை சாமி தரிசனம் செய்தார், திருக்கோயில் சார்பாக அவருக்கு பிரசாதம் மற்றும் மாலை மரியாதை வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மட்டுமல்லாமல் கோவில் ஊழியர்களும் அவருடன் செல்பி எடுத்தும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

 

Tags : திருவண்ணாமலைகோவிலில் கூலி படம் வெற்றியடைய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.பிரார்த்தனை.

Share via