9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

தென்மேற்கு வங்கக்கடல், தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஆக., 07), கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால், தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.என வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Tags : 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.