டெல்லியின் மாசுபாட்டில் 65 விழுக்காடு அண்டை பகுதியில் இருந்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
டெல்லி மற்றும் வட மாநிலங்களில் காசு மாறுபாட்டால் கடுமையான பிரச்சனை உருவாகி உள்ளது. இதற்கு வாகன புகை தொழிற்சாலை புகைகள் தூசி அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரித்தல் மற்றும் குறைந்த வெப்பநிலை, காற்று வேகம் ஆகியவை முக்கிய காரணங்களாகும். இது பி .எம் .2.5 மற்றும் பி. எம். 10 போன்ற நுண்துகல்களின் அளவை அபாயகரமான நிலைக்கு உயர்த்துவதின் காரணமாக உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது .தீபாவளி மற்றும் பிற நிகழ் நிகழ்வுகளின் போது மாசுபாடு டெல்லி பஞ்சாப் என்ற பகுதிகளில் மிகவும் உச்சத்தை எட்டி விடுகிறது. டெல்லியின் மாசுபாட்டில் 65 விழுக்காடு அண்டை பகுதியில் இருந்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. பஞ்சாப் ஹரியானா போன்ற மாநிலங்களில் விவசாய நிலங்களில் பயிர்களை அறுவடை செய்த பின் அதன் கழிவுகளை எரிப்பதன் மூலமும் குளிர்காலத்தில் டெல்லி காற்றில் பெரும் மாசுபாட்டை ஏற்படுத்துவதன் மூலமாகவும் இது உருவாகிறது வாகனங்கள் வெளியிடும் புகை மற்றும் சாலைகளில் உள்ள தூசி மாசுபாடுகளை அதிகரிக்க செய்கிறது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் வெப்ப மின் நிலையங்கள் மாசுபாடு அதிகரிக்க காரணமாகின்றன குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவது மற்றும் காற்றின் வேகம் குறைவாக இருப்பது மாசுபடுத்திகளை பரவாமல் தடுத்து மாசை அதிகரிக்கச் செய்கிறது. தீபாவளி காலகட்டங்களில் வெடி வெடிப்பது மாசுபாட்டின் அளவை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைவரும் கடுமையான உடல் பிரச்சனைகளுக்கு காரணமாகிறார்கள். காற்றின் தரக் குறியீடு தொடர்ந்து மோசமான மிக மோசமான அல்லது அபாயகரமான நிலையிலே இருக்கின்றது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் அலுவலகங்களில் பணியாற்றுவோர் வீடுகளில் இருந்து கல்வி கற்பதும் வேலை பார்ப்பதுமான நிலை நீடிக்கின்றது. டெல்லி போன்ற பெரு நகரங்களில் பழைய டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இம் காற்று மாசுபாட்டால் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் முயற்சி தீவிர படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் அறுவடைக்குப் பின் உள்ள பயிர் கழிவுகளை எரிக்காமல் இருக்குமாறு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் டெல்லி போன்ற முக்கிய நகரங்கள் மாசடைவதை தடுக்க முடியும்.
Tags :



















