அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

by Admin / 07-01-2026 11:42:01am
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஏற்கனவே ,பாஜக கூட்டணியில் பாமக இருந்து வந்த நிலையில் தற்பொழுது அது இறுதி செய்யப்பட்டுள்ளது. 2026 இல் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தி.மு.க அரசை வீழ்த்தி வெற்றி பெறுவதே தங்கள் கூட்டணி லட்சியம் என்று தெரிவித்துள்ளனர். இருவரின் சந்திப்பிற்குப் பிறகு பா.ம.க போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு விட்டதாக, அது பின்னர் அறிவிக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தாா்.. பாட்டாளி மக்கள் கட்சிக்கு 20 முதல் 23 இடங்கள் வரை ஒதுக்கப்படலாம் என்று தகவல். இக் கூட்டணி குறித்து பேசுகையில், வெற்றி கூட்டணி என்றும் இயற்கையான கூட்டணி என்றும் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
 
Tags :

Share via

More stories