நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி*
நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.*
இளம் மாணவர்களிடம் 'சாதி நச்சு' எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ செலவு மற்றும் கல்விச் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி*
நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னத்துரை அவனது தங்கை இருவரையும் சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவத்தின் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய ப்ளஸ் டூ மாணவர்கள் நான்கு பேர் இரண்டு சிறுவர்கள் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .இது குறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் சமூக நீதிக்கான அரசு இது என்றும் பாதிக்கப்பட்ட தம்பி சின்ன துறையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக் கொள்கிறேன். நாளைய தமிழ் சமூகத்தை படைக்க காத்திருக்கும் மாணவ மலர்களுக்கு அன்பான வேண்டுகோள் என பதிவிட்டு தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்..
Tags :