.கிரிவலம் பகுதியில்.நகை பறிப்பில் ஈடுபட்ட போலி சாமியார் கைது

by Admin / 12-08-2023 01:14:46pm
 .கிரிவலம் பகுதியில்.நகை பறிப்பில் ஈடுபட்ட போலி சாமியார் கைது

இன்று காலை திருப்பதியைச் சேர்ந்த லாவண்யா என்பவர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்  கிாிவல  சாலையில் உள்ள துர்வாசகர் முனிவர் கோவிலுக்கு அருகே உள்ள பகுதிக்கு தமக்கு ஏற்பட்ட இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்ற பொழுது ,அங்கே மறைந்திருந்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் உள்ள நகைகளை பறிக்க முயன்ற பொழுது அவர் கத்தி கூச்சலிடமே அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றியதோடு மட்டுமில்லாமல் அந்த வழிப்பறிக்காரர்களிடமிருந்து  அவரை மீட்டு போலீஸிடம் ஒப்படைத்தனர் ..நகை பறிப்பில் ஈடுபட்ட அந்த நபர் திருக்கோவிலூர் சேர்ந்த பாபு என்பவர் ஆவார். இவர் சாமியார் வேடமிட்டு இதுபோன்று பல்வேறு குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது/ இவரின் நகை பறிப்பு செயலால் காவல்துறையினர் கைது செய்தனர் .கிரிவலம் பகுதியில் இது போன்ற போலி சாமியார்கள் அதிகமாக இருந்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாக பல குற்றம் சாட்டிய நிலையில், காவல்துறையினர் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

 

Tags :

Share via
Logo