மகாராஷ்டிராவில் ஆளுநர் பிறப்பித்த உத்தரவிற்கு தடையில்லைநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள், அசாமில் முகாமிட்டுள்ளனர். சிவசேனாவை சேர்ந்த 39 அதிருப்தி எம்எல்ஏக்கள் உட்பட மொத்தம் 48 எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே அணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை சிறப்பு கூட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார். இதில் உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். நாளை மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட ஆளுநரின் முடிவுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில்ஆளுநரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு தடையில்லை என உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
Tags : No-confidence vote tomorrow on order issued by Governor in Maharashtra



















