ஜூலை 18 முதல் அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் 47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி கூட்டப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வரி உயர்வு வரும் ஜூலை 18 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அஞ்சலக சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. முத்திரை இல்லாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படும் இறைச்சி, மீன், தயிர், பன்னீர், உலர் பருப்பு வகை, காய்கறிகள் கோதுமை, பட்டாணி மாவு, வெல்லம் போன்ற பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் எல்.இ.டி, கத்திகள் மீதான ஜிஎஸ்டி12% லிருந்து 18% ஆகவும் சூரிய சக்தியால் தண்ணீர் சுடவைக்கும் இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி 5%லிருந்து 12% ஆகவும் கிரைண்டர் மற்றும் அரசி ஆலை இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி 5%லிருந்து 18% ஆகவும் தண்ணீர் எடுக்கப் பயன்படும் மோட்டார் பாம்புகள் மீதான ஜிஎஸ்டி 12% லிருந்து 18% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கி செக்குகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது.வரைபடங்கள் (மேப்), சார்டுகளுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.ரூ.1,000 க்கும் குறைவான வாடகை கொண்ட ஹோட்டல் அறைகளுக்கு இதுவரை வரி விதிக்கப்படாமல் இருந்துவந்த நிலையில், தற்போது 12 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது.
தங்கம், வைரம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் மீதான வரி ஏய்ப்பை தடுக்க மாநிலங்களுக்கு இடையே அவற்றை கொண்டு செல்வதற்காக விதிக்கப்பட்ட இ வே பில் வரம்பிலிருந்து மாநிலங்கள் கூடுதலாக வரி வரம்பை நிர்ணயிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Tags : GST will come into effect from July 18.