by Editor /
30-06-2023
11:55:34pm
இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகை தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் நவம்பர் மாதம் 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு பலரும் அவரவர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
இதனால் ரயில், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும்.பொதுவாக 120 நாட்கள் முன்னதாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இதன்படி பயணிகளின் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஜூலை 12ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு துவங்கப்பட இருக்கிறது.
அதன்படி ஜூலை 12-ந் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ம் தேதியும், 13-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10-ம் தேதியும், 14-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 11-ம் தேதியும்,
15-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 12-ம் தேதியும், 16-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 13-ம் தேதியும், 17-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 14-ம் தேதியும், 18-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 15-ம் தேதியும் பயணம் செய்து கொள்ள முடியும்.<br />
Tags :
Share via