நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது.
குமரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நாகர்கோவில் எம். எம். நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீசார் அங்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 1 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை வீட்டின் உரிமையாளரான பாபு குசைன் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags :





jdjnscasd.jpg)













