ஜாமின் வழங்கக்கோரிஅமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த விசாரணையின் போது, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை தன்னால் விசாரிக்க முடியாது எனவும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுமாறும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி தெரிவித்தார். இதையடுத்து, ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி, நீதிபதி அல்லியிடம் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார்.
Tags : ஜாமின் வழங்கக்கோரிஅமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல்.