7-15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் திருத்த கட்டணம் ரத்து.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 7-15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் திருத்த கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண ரத்து ஓராண்டுக்கு செயல்பாட்டில் இருக்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுமார் 6 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் இந்த கட்டண விலக்கு மூலம் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த காலக்கெடு சலுகை, குழந்தைகளுக்கான ஆதார் தரவுகளை புதுப்பிப்பதில் குடும்பங்களுக்கு இருக்கும் நிதிச்சுமையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : 7-15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் திருத்த கட்டணம் ரத்து