ஒகேனக்கலுக்கு நீர்வரத்து ஒரு இலட்சத்து 20ஆயிரம் கனடியாக அதிகரிப்பு. வெள்ள அபாய எச்சரிக்கை .

by Editor / 27-07-2024 07:05:16am
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து ஒரு இலட்சத்து 20ஆயிரம் கனடியாக அதிகரிப்பு.  வெள்ள அபாய எச்சரிக்கை .

ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடினடியாக நீர்வரத்து உயர்வு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. 

இதனால் கர்நாடக அணைகள் தற்போது முழு கொள்ளளவை எட்ட உள்ளன. கர்நாடக அணிகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமங்கி, ஹேராவதி ஆகிய அணைகள் தற்போது நிரம்பும் தருவாயில் உள்ளதால்.அந்த அணைகளுக்கு வரும் மழைநீர் முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது,அவ்வாறு திறந்து விடப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லைக்கு இந்த மாதம் 14ஆம் தேதி முதல் வரத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி முதல் நீர்வரத்து 12 ஆயிரம் கன அடிக்கு மேல் மேல் வந்தது. எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. 

தற்போது மீண்டும் கர்நாடக பகுதிகளில் கன மழை பெய்து வருவதை தொடர்ந்து நேற்று முதல் நீர்வரத்து உயர தொடங்கியது,நேற்று முன் தினம் காலை, முப்பதாயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 62 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இரவு ஒரு லட்சம் கன அடியாக நிறுவனத்தின் உயர்ந்தது இந்நிலையில் இன்று காலை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து மேலும் உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் இருந்து நேற்று முன்தினம் 1.5 லட்சம் கன அடி நீர் வரை திறந்து விடப்பட்டுள்ளது. அடுத்த அடுத்த நாட்களில் மேலும் நீர்வரத்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் காவேரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து 12 வது நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

Tags : ஓகேனக்கல் வரும் வாகனங்களை மடம் சோதனை சாவடியிலே திருப்பி அனுப்பி வைப்பு.

Share via

More stories

Logo