சிறை, மரணம் அல்லது 2022 தேர்தல் வெற்றி: இவைகளை எதிர்கால வழியாக பார்க்கிறேன் என்கிறார் பிரேசில் அதிபர்

by Admin / 29-08-2021 10:59:09pm
சிறை, மரணம் அல்லது 2022 தேர்தல் வெற்றி: இவைகளை எதிர்கால வழியாக பார்க்கிறேன் என்கிறார் பிரேசில் அதிபர்



   
பிரேசில் நாட்டில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அந்நாட்டு அதிபர் தன்னுடைய எதிர்காலத்தை மூன்று வழிகளில் பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டின் அதிபராக இருப்பவர் ஜெய்ர் போல்சனோரா. கொரோனா வைரஸ் தொற்று உலகில் வேகமாக பரவிய காலத்தில் மாஸ்க் அணிய வேண்டாம், விவசாயிகள் துப்பாக்கி வைத்துக் கொள்ளுங்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டால் முதலையாகக் கூட மாறலாம் எனக் கூறி கடும் விமர்சனத்திற்கு உள்ளானவர். பிரேசில் உச்சநீதிமன்றம் மாஸ்க் அணியாததால் அபராதம் கூட விதித்தது.

அடுத்த ஆண்டு பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதிபர் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில்தான் நடைபெறும். ஆனால் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்படும் என தேர்தல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மின்னணு இயந்திரம் மீது அதிபருக்கு நம்பிக்கையில்லை. மேலும், அதிபர் தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

தீவிர வலது சாரி கொள்கை கொண்ட  ஜெய்ர் போல்சனோரா, கிறிஸ்துவ அமைப்பு தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில்  பேசினார். அப்போது அவர் கூறும்போது ‘‘எனது எதிர்காலத்தில் கைது, கொலை அல்லது வெற்றி ஆகிய மூன்று மாற்று வழிகள் உள்ளன. இதில் முதலாவது கூறியது குறித்து கேள்வி எழுப்ப வேணடியதில்லை. ஏனென்றால் உலகில் உள்ள எவராலும் என்னை மிரட்ட முடியாது’’ என்றார்.

கிறிஸ்துவ அமைப்பு தலைவர்கள் அதிபருக்கு ஆதரவாக அடுத்த மாதம் 8-ந்தேதி நாடு தழுவிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

Tags :

Share via