நெல்லையில் கல் குவாரிகள் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் நாற்காலி, மேஜைகள் வீச்சு.
நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆவணப்படுத்தும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அறப்போர் இயக்கம் சார்பில் நெல்லை கொக்கிரகுளதில் இன்று நடந்தது.கூட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது கல்குவாரி உரிமையாளர் சங்கத்திற்கு ஆதரவான சிலர் திடீரென கூட்டத்திற்குள் நுழைந்தனர். எங்களிடமும் கருத்து கேட்க வேண்டும் என அறப்போர் இயக்க நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் மேடையில் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசினர். தகவல் அறிந்த போலீசார் வந்தனர்.நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக எவ்வித அனுமதியும் பெறாததால் கூட்டத்தை பாதியிலேயே ரத்து செய்தனர்.
Tags : நெல்லையில் கல் குவாரிகள் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் நாற்காலி, மேஜைகள் வீச்சு.



















