5 நாட்களுக்கு வாட்டி வதைக்கப்போகும் வெயிலின் தாக்கம்.

by Editor / 08-02-2025 08:56:47pm
5 நாட்களுக்கு வாட்டி வதைக்கப்போகும் வெயிலின் தாக்கம்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட காலத்திலும் ஆச்சரியம் தரும் வகையில் அவ்வப்போது மழை பெய்த நிலையில், மழையோடு சேர்த்துக் குளிர் காலமும் முடிவடைந்து தற்போது மெல்ல வெயில் காலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்.
இனி வரும் காலங்களில் வெயிலும் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வானிலை ஆய்வாளர்களும் அதையே தெரிவிக்கின்றனர்.இந்தநிலையில் நாளை (பிப்.09) முதல் பிப்.13ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

 

Tags : 5 நாட்களுக்கு வாட்டி வதைக்கப்போகும் வெயிலின் தாக்கம்.

Share via