உதயநிதி பேச்சுக்கு ஜெயக்குமார் கண்டனம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். திராவிடம் என்று கூறுவார்கள், பிறகு சனாதனம் என்று கூறுவார்கள். இதை இரண்டையும் கூறி திமுக மக்களை ஏமாற்றி வருகிறது. இதுபோன்ற செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சை எந்த மதத்தை சார்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள்'' என தெரிவித்தார்.
Tags :