மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை சன்னிதானத்தில் இன்று மாலை நடை திறக்கப்பட்டது.
கார்த்திகை மாதம் நாளை (நவம்பர் 16) துவங்குவதை முன்னிட்டு புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று (நவம்பர் 15) மாலை நடை திறக்கப்பட்டது.வழக்கமாக அபிஷேகங்கள், பூஜைகள் நிறைவடைந்த பிறகு இரவு ஹரிவராசனம் இசைக்கப்பட்டு, கோவில் நடை சாத்தப்படும். இன்று நடைபெறும் பூஜையில் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வில்லை. நவம்பர் 16ம் தேதி கார்த்திகை முதல் நாளான நாளை அதிகாலை முதலே பக்தர்கள், சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
2024ம் ஆண்டு மண்டல பூஜை நவம்பர் 16ம் தேதி துவங்கி, டிசம்பர் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் தங்க அங்கிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வதுடன் மண்டல பூஜை நிறைவு பெறும்.
மண்டல பூஜைக்கு பிறகு டிசம்பர் 26ம் தேதி இரவு 11 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, 2025ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் மற்றும் மகரவிளக்கு பூஜை 2025ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி நடைபெறும்.
Tags : மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை சன்னிதானத்தில் இன்று மாலை நடை திறக்கப்பட்டது.