ஆப்கானிஸ்தானில் 2வது நாளாக மீண்டும் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 2வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.17 மணியளவில் பூமி அதிர்ந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கடந்த இரண்டு நாட்களில் 3-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக அடிக்கடி அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :