ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 105 ரூபாய் ஒரு சவரனுக்கு 840ரூபாய் உயர்வு.
தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவிற்கு விண்ணை நோக்கி சென்று கொண்டிருக்கிறது சாதாரண மனிதர்கள் இனி தம் வீட்டில் நடக்கும் சுப காரியங்களுக்கு தங்கத்தை வாங்க முடியுமா என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 105 ரூபாய் ஒரு சவரனுக்கு 840 உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 8 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 71,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றம் இன்றி ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Tags :



















