12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம்... நாசா எச்சரிக்கை...
இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் அடுத்த 80 ஆண்டுக்குள் நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3 புள்ளி 7 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருகிறது.
மேலும் இமயமலை உள்ளிட்ட பனிமலைகளிலும் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழு அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டு உள்ளது.
அதில், இரண்டாயிரத்து 100-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப்பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.
Tags :