இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும்... ஆப்கனில் இந்திய தூதரகம் எச்சரிக்கை...

by Admin / 11-08-2021 12:11:55pm
இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும்... ஆப்கனில் இந்திய தூதரகம் எச்சரிக்கை...

ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அங்குள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் மெல்ல மெல்ல வெளியேறி வருவதை தொடர்ந்து அங்கு தாலிபான்களின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.

 ஆப்கானிஸ்தானில் புறநகர் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்ட தாலிபான்கள் மாகாண தலைநகரங்களையும் கைப்பற்ற தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்ற தாலிபான்கள் முயன்று வருகின்றனர்.

 தாலிபான்களில் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகிறது ஆப்கன் ராணுவ படை. இந்த பதற்றமான சூழலில் பாதுகாப்பு கருதி அங்கிருக்கும் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக நாட்டை வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories