வயநாடு பகுதியில் இயற்கையின் சீற்றத்தால் 365 உயிர்கள் பலியானதாக தகவல்.

by Editor / 04-08-2024 11:11:20pm
 வயநாடு பகுதியில் இயற்கையின் சீற்றத்தால் 365 உயிர்கள் பலியானதாக தகவல்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 29ஆம் தேதி நள்ளிரவு இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மீட்பு குழுவினர் தொடர்ந்து செய்து வரும் நிலையில் தற்போதைய காலை நிலவரப்படி 365 உயிர்கள் பலியானதாக தகவல்கள் உள்ளது மேலும் 148 சரணங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது மற்றும் அடையாளம் தெரியாத சடலங்களை சர்வ மத பிரார்த்தனைகளுடன் பொது மயானங்களில் அடக்கம் செய்யவும் கேரளா அரசு தீர்மானித்துள்ளது நேற்று கண்டெடுக்கப்பட்ட 12 உடல்கள் உட்பட 16 சடலங்கள் சாலியாறு பகுதியில் மீட்கப்பட்டன மேலும்10,042 நபர்கள் முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது மேலும் மீட்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டும் நிலை உள்ளதாகவும் கேரளா அரசு தெரிவித்துள்ளதாக காணப்படுகிறது மேலும் முண்டக்கை சூரர்மலை அட்டமலை பகுதியில் மீட்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதாகவும் சடலங்களை கயிறுகள் மூலம் அக்கறையிலிருந்து அக்கரைக்கு மீட்டெடுத்து வருகின்றனர்.

 

Tags : வயநாடு பகுதியில் இயற்கையின் சீற்றத்தால் 365 உயிர்கள் பலியானதாக தகவல்.

Share via