மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் .

by Editor / 22-04-2024 08:23:51am
மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் .

தமிழகத்தில் ஒரு வாரமாக ஆங்காங்கே மழை பெய்து வருவது குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தால் இந்த மாதம் முழுக்க வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும் என்றாலும் தற்சமயம் பெய்து வரும் மழையால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 22) தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்

Share via