பாளையங்கோட்டையில் ஐ டி ஊழியர் வெட்டி கொலை உடலை வாங்க மறுத்து 2 வது நாளாக போராட்டம்.

பாளையங்கோட்டையில் ஐ டி ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம். உடலை வாங்க மறுத்து 2 வது நாளாக போராட்டம்.
காதல் விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த கவின் என்ற இளைஞர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் பட்ட பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கொலையை கண்டித்து கவின் உறவினர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் 24 மணி நேரத்தில் கொலைக்கு தூண்டுதலாக செயல்பட்டதாக கூறி காவல்துறையில்
பணி புரிந்த குற்றவாளியின் சுர்ஜித் தின் தாய் மற்றும் தந்தை இருவரையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் அதன் பிறகு தான் கவின் உடலை பெறுவோம் எனவும் தெரிவித்தனர்.
24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.
ஆனால் 15 மணி நேரம் ஆன நிலையில் போலீசார் தரப்பில் இருந்து தற்போது வரை எந்த பதிலும் வரவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதியத்துக்கு மேல் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.
இதனை இன்று 2 வது நாளாக ஊடலை வாங்க மறுத்து வருகின்றனர்…
Tags : பாளையங்கோட்டையில் ஐ டி ஊழியர் வெட்டி கொலை உடலை வாங்க மறுத்து 2 வது நாளாக போராட்டம்.