பெண் காவலர்களின் கழிவறையில் ரகசிய கேமரா -காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

by Admin / 20-01-2026 12:08:17am
பெண் காவலர்களின் கழிவறையில் ரகசிய கேமரா -காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி பெண் காவலர்களின் கழிவறையில் ரகசிய கேமரா மற்றும் செல்போன் வைத்து வீடியோ எடுத்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர்கள் பயன்படுத்தும் கழிவறையில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டதை ஒரு பெண் காவலர் கண்டுபிடித்தார் .இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில்,  சிறப்பு உதவி ஆய்வாளர் இந்த செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via