டெல்லியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இல்லத்தில் தமிழக பாஜக நிர்வாகிகள் இன்று ஆலோசனை
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு டெல்லியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இல்லத்தில் தமிழக பாஜக நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர். டெல்லி தீமூர்த்தி சாலையில் உள்ள பியூஸ் கோயில் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைகள் தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் மத்திய இணை அமைச்சர் எம். முருகன் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுள்ள புதிய கட்சிகள் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக அதிமுக பாஜக இடையிலான தொகுதி பேச்சு வார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் வருகின்ற புதன்கிழமை பியூஸ் கோயில் சென்னைக்கு வருகை தர உள்ளார். அப்பொழுது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தை இறுதி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி மதுராந்தகத்தில் பங்கேற்க உள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் குறித்தும் அதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பது குறித்தும், இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
Tags :



















