நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர்களுக்கு 41 வாகனங்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கினர்
நீர்வளத் துறை உதவி செயற் பொறியாளர்களின் பயன்பாட்டுக்காக ரூ. 3. 70 கோடியில் 41 புதிய ஜீப்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீர்வளத் துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் கீழ் உள்ள அனைத்து உபகோட்டங்களில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர்களுக்கு பழைய வாகனங் களுக்கு மாற்றாக புதியதாக ஜீப் வாகனங்களை வழங்கிடும் விதமாக, ரூ. 3. 70 கோடியில் 41 ஜீப் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இவற்றை நீர்வளத் துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் உதவி செயற்பொறியாளர்களின் பயன் பாட்டுக்காக வழங்கும் வகையில், தலைமைச் செயலகத்தில் அந்த வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன் வாகனங்க ளுக்கான சாவிகளை உதவி செயற் பொறியாளர்களுக்கு வழங்கினார். இதனால் திட்ட உருவாக்க பிரிவில் பணிபுரியும் பொறியாளர்கள், நிலமேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்களை பெருக்க தொலைதூர மற்றும் மலைப்பாங்கான இடங்களில் பல புதிய திட்டங்களை ஆய்வு செய்து உருவாக்க இந்த வாகனங்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்
Tags :