பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை குழு அவசர ஆலோசனை நடத்தியது.

by Admin / 02-03-2026 12:26:11am
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை குழு அவசர ஆலோசனை நடத்தியது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழல் குறித்து பாதுகாப்பு அமைச்சரவை குழு ஞாயிறு அன்று அவசர ஆலோசனை நடத்தியது. வளைகுடா நாடுகளில் வசிக்கும் சுமார் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது . இந்த போர்சூழலால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியை ஏற்படக்கூடிய பாதிப்புக்கு குறித்து விவாதிக்கப்பட்டது .போர் பகுதிகளில் சிக்கி உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மேற்பதற்கான தயார்நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், எஸ் .ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்டனர் . சனிக்கிழமை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் , ஈரான் மீது நடத்திய கூட்டு தாக்குதல்கள் மற்றும் அதை தொடர்ந்து ஈரான் நடத்திய பதில் தாக்குதலால் வளைகுடா பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

 

Tags :

Share via
Logo