சீமான் உள்ளிட்ட 19 பேரும் விடுவிப்பு

திருச்சி விமான நிலையத்தில் நடந்த அடிதடி வழக்கில் இருந்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 19 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2018ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில், மதிமுக, நாதக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினர் இடையே நடந்த அடிதடி மோதல் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நாதகவின் 14 பேர், மதிமுகவின் 4 பேர் என மொத்தம் 19 பேரை திருச்சி மாவட்ட நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
Tags :