சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர்

by Staff / 25-04-2024 01:45:53pm
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர்

சிறுமியை ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்த சம்பவம் தெலங்கானாவின் பஷீராபாத்தில் நடந்துள்ளது. போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நரேஷ் (24) என்பவர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை (16) பலாத்காரம் செய்துள்ளார். பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச்சென்று வந்த இவர், பாதிக்கப்பட்ட சிறுமியை காதல் என்ற பெயரில் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமானார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

Tags :

Share via