இந்தோனேசியா சென்றடைந்த பிரதமர் மோடி

by Staff / 07-09-2023 12:20:00pm
இந்தோனேசியா சென்றடைந்த பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை இந்தோனேசியா சென்றார். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜகார்த்தாவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு, இந்தோனேசிய பெண்கள் பாரம்பரிய நடனம் ஆடி பிரதமரை வரவேற்றனர். அங்கு நடைபெறும் 20வது ஆசிய-இந்திய மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடுகளில் அவர் பங்கேற்கிறார். அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

 

Tags :

Share via